22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்ரேலியாவில் கன மழை!!

ஆஸ்ரேலியாவில் என்றும் இல்லாதவாறு கடும் மழை பெய்து வருகின்றது.


ஆஸ்திரேலியா கடலில் உருவாகியுள்ள டேமியன் புயலால், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை பெய்துள்ளது.

24 மணி நேரத்தில் மட்டும் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
குறித்த இரு மாகாணங்களிலுள்ள பல நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதால் சாலை போக்குவரத்து முடங்கி உள்ளது.

மேலும் சில இடங்களில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இம்மழை அடுத்த சில நாட்களுக்க நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவை கடும் வெய்யிலால் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்து மாகாணங்களில் தொடர்ந்து 6 மாதங்களாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. இத்தீயில் ஆயிரக்கணக்கான வீடுகளும், பல கோடி ஏக்கரிலான காடுகளும் அழிந்து போனது. இலட்சக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.

No comments