பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வயது அதிகரிப்பு

பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புக்கான வயது எல்லையை 45ஆக அதிகரிக்க அரசாங்கம் நேற்று முடிவு செய்துள்ளது.

தொழில் கோரும் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் தொழில் வழங்கும் வேலைத்திட்டமொன்று சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளின் வயதெல்லையில் சிறு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

அதன்படி, 35 ஆக இருந்த விண்ணப்பதாரிகளின் வயதெல்லையை 45ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments