செயலாளர் சண்டையுடன் கூடுகிறது ஐதேக

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழுக் கூட்டம் இன்று (10) மாலை அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நவீன் திஸாநாயக்கவை அந்த இடத்திற்கு நியமிக்குமாறு ரணில் தரப்பு கோரியுள்ளது.

இந்நிலையிலும் இன்றைய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதால் இன்றைய கூட்டம் பரபரப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை மேற்படி அரசியல் கூட்டணியில் ராஜித சேனாரத்ன எம்பியையும் இணைக்க ஒரு தரப்பு முயற்சிகளை செய்து வருகிறது. அதற்கு முன்னோடியாக இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் முழுமையாக தன்னை இணைத்துக் கொள்ள ராஜித தீர்மானித்துள்ளார் என்று அறிய முடிகின்றது.

No comments