அமொிக்க அதிபரைக் கொலை செய்யக் காத்திருந்த இளைஞர் கைது

அமொிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொலை செய்வதற்காக வெள்ளை மாளிகைக்கு வெளியே கத்தியுடன் காத்திருந்த இளைஞர் ஒருவர்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய ரோஜர் ஹெட்க்பெத் என்பவர் சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசியக் காவல்துறை அதிகாரியை அணுகி ரோஜர் தான் டொனால்ட் டிரம்பைக் கொலை செய்ய வந்ததாகவும் தன்னிடம் கத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ரோஜரைக் கைது செய்ய காவல்துறையினர் அவரின் இடது இடுப்பில் மூன்றரை அங்குல கத்தி இந்ததாவும் அதேபோன்று வலது இடுப்பில் பில்டல் கோல்சர் இருந்ததாவும் தெரிவித்துள்ளனர்.

காவலில் எடுத்த ஜோஜரைக் காவல்துறையினர் அவரை மனநல மதிப்பீட்டுக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments