கோத்தா சீனாவிற்கு:மகிந்த இந்தியாவிற்கு?


தெற்காசிய அரசியல் சூழல் பரபரப்பின் மத்தியில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சஷ 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 7ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

மஹிந்த பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், செல்லும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார்.

முன்னதாக மோடிக்கும் கோத்தபாயவிற்குமிடையிலான சந்திப்பு நடந்திருந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மகிந்த இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். 

No comments