யேர்மனியில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி! 5 பேர் காயம்!

யேர்மனியின் ஹெசன் மாநிலத்தில் உள்ள பிராங்போர்ட் நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஹனோ என்ற நகரில் இனம் தொியாதோர்
நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி நேற்றுப் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இரண்டு சிஷா புகைக்கும் மதுபானசாலைகள் (பார்) மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

முதலாவது சிஷா புகைக்கும் மதுபானசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து இரண்டாவது சிஷா புகைக்கும் மதுபானசாலையில் (பார்) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் கையுடன் அந்த இடத்திலிருந்து ஒரு கரு நிறத்தில் வாகனம் ஒன்று புறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலாளிகளைத் தேடி காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அத்துடன் தாக்குதலாளிகள் தப்பிச் செல்வதைக் கண்காணிக் உலங்குவானூர்தி மூலமாக வான்வெளிக் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹனோ நகரில் 90 ஆயிரம் வரையிலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments