18ம் திகதி கடைசி நாடாளுமன்ற அமர்வு?


மார்ச 2ம் திகதியுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் நாளை (12) நடைபெறவுள்ளது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஊடாக நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன, எதிர்வரும் வாரத்துக்கான ஒழுங்குப்பத்திரம் உருவாக்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் அதுவே இறுதி அமர்வாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

No comments