மட்டுவில் இருந்து மகரகமவுக்கு பஸ் சேவை

மட்டக்களப்பிலிருந்து மகரகமவிற்கான நேரடி பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் சாலையினால் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசேட நிகழ்வு நேற்று (10) ஏறாவூர் நகர சபைக்கு முன்பாக நடைபெற்றது.

பஸ் வண்டி தினமும் இரவு 10.30 மணிக்கு  மட்டக்களப்பு நகரிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.00 மணியளவில் மகரகமவில் தரித்து 5.30 மணியளவில் தெஹிவளையை அடையும்.

அதேபோன்று அந்த பஸ் வண்டி மாலை 3.45 மணிக்கு தெஹிவளையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை மட்டக்களப்பு காத்தான்குடியை வந்தடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments