ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல்?

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு , சஜித் தரப்பு ஆதரவை வழங்காவிட்டாலும் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கொத்மலையில் இன்று (10) இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்பே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதாவது , முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்து – தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் யோசனைக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்துள்ளமை தொடர்பில் ,ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments