கொரோனா கப்பலில் இருந்த இலங்கையர் வெளியேற்றம்
யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமன்ட் இளவரசி கப்பலில் இருந்து இலங்கையர்கள் இருவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 691 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்த ஒரு விசேட விமானம் மூலம் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமன்ட் இளவரசி கப்பலில் சேவையாற்றிய இலங்கை ஊழியர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இலங்கையர்கள் இருவரும் 14 நாட்களுக்கு பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment