அநீதி இழைக்கவே கால நீடிப்பு பெற்றிருந்தனர்

இலங்கை அரசாங்கம் கால நீடிப்புக்காகவே ஐ.நா பேரவைக்கு இணை அனுசரணை வழங்கி இருந்ததே தவிர, உண்மையாக தமிழருக்கு நீதி வழங்குவதற்காக அல்ல என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத்தொடரின் ஏழாவது அமர்வு நேற்று (26) ஜெனீவாவில் இடம்பெற்றது.

இதன்போது, 30/1, 34/1 மற்றும் 40/1 பிரேரணைகளிலிருந்து விலகுவதாக ஐ.நா பேரவையில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இதனைக் கண்டித்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா மற்றும் தலைவி யோகராசா கனகரங்சினி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைவியும் வடக்கு, கிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உப தலைவியுமான ஏ.அமலநாயகி ஆகியோர் ஐ.நா. சபை முன்றலில் ஊடக சந்திப்பிணை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி,

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஐ.நா.வின் 30/1 மற்றும் 40/1 பிரேரணைகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அது எமக்கு ஏமாற்றத்தை தந்தாலும் இவ்வாறு நடக்கும் என்பது நாம் எதிர்பார்த்ததொன்றே. ஏனென்றால் எமக்கு தெரியும் இவர்கள் எதையும் செய்வதற்காக இந்த அனுசரணைக்கு இணை அனுசரணை வழங்கவில்லை. ஒரு காலக்கெடு நீடிப்பை பெறுவதற்காகவே இந்த இணை அனுசரணையை வழங்கி இருந்ததுடன், காலத்துக்கு காலம் பொய்களை கூறி கால நீடிப்பை இவர்கள் பெற்று இருந்தார்கள் இதற்கு எமது பிரதிநிதிகளும் துணை போயிருந்தனர் - என்றார்.

No comments