சீனாவிலிருந்து வந்த மாணவிக்கு கொரோனா இல்லையாம்

கொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேகத்தில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து உயர் கல்வியை நிறைவு செய்து நாடு திரும்பிய மொனராகலையை சேர்ந்த மாணவியே இவ்வாறு சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவரது குருதி மாதிரியை பரிசோதித்த மருத்துவ ஆய்வு நிறுவனம் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்தது.

No comments