சங்கர் - மோடியுடன் மஹிந்த சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

ஐந்து நாட்கள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த நேற்று புதுடெல்லிக்கு சென்ற நிலையில், இன்று (08) காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்தார்.

இதையடுத்து, தற்போது பிரதமர் மோடியை சந்தித்துள்ள அவர், இலங்கை தமிழர் விடயம் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடலில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்தவின் இந்தியா விஜயத்தில் அடுத்து குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ளதோடு, தொடர்ந்து பல வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

No comments