சூளைமேடு வழக்கில் இருந்து தப்பினாரா டக்கி? இந்தியா சென்றார்

இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் 1986ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

1986ம் ஆண்டு சென்னை சூளைமேட்டை சேர்ந்த திருநாவுகரசு என்பவரை சுட்டுக் கொலை செய்ததாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா மீது இந்திய பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இதன் வழக்கு சென்னையில் இடம்பெற்று வருவதால் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு சென்றால் கைது செய்யப்படலாம் என பல காலமாக கூறப்படுகிறது. இதனால் அவர் இதுவலை காலமும் இந்தியாவிற்கு செல்லாமல் இருந்தார்.

இதேவேளை, "இந்தியாவிற்கு சென்றால் நான் கைது செய்யப்படலாம் என எந்தவித உத்தரவும் எனக்கு விடுக்கப்படவில்லை. எனக்கு எந்தவொரு நேரத்திலும் இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது" என்று மூன்று மாதங்களுக்கு முன்னர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

No comments