முல்லைத்தீவில் வெடித்தது குண்டு; ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு - சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் இன்று (08) மதியம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வியாபாரத்துக்கென அபாயகரமான வெடி பொருட்களை எடுத்து வந்து அவற்றை பிரித்து மீள் விற்பனை செய்வதற்கு முற்பட்ட வேளையில் மோட்டார் வகையான ஒரு குண்டு வெடித்து சிதறியுள்ளது.

இதன்போது குறித்த குண்டை பிரித்துக் கொண்டிருந்த நபர் படுகாயமடைந்தார். இதன்போது தண்ணீர் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை புலேந்திரன் (42-வயது) என்ற நபரே காயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினரும் குறித்த இடத்தை சோதனையிட்டு வருகின்றனர்.

No comments