கொவிட்-19 இதுவரை 1600 மரணங்கள்

உலகை அச்சுறுத்தும் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, கொவிட்-19 வைரஸ் உருவாகியது என கூறப்படும் சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை மட்டும் 139 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments