பாலியல் புகைப்படங்கள்! பாரிஸ் மேயர் கனவை தவிடுபொடியாக்கியது!

ஒரு பாலியல் புகைப்படங்கள் வெளிவந்ததால் பிரெஞ்சு ஆளும் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக் பாரிசின் நகர முதல்வராக (மேயர்)

வரவேண்டும் என்ற நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஏற்கனவே தேர்தல் களத்தில் பின்தங்கியிருந்த ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும் நெருங்கிய கூட்டாளியுமே பென்சமின் கிரிவாக். இவர் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பாரிஸ் நகர முதல்வர் வேட்பாளராக போட்டியில் களமிறங்கியிருந்தார்.

பென்சமின் கிரிவாக் ஒரு பெண்ணுக்கு செல்பேசி மூலம் பாலியல் படங்களை அனுப்பியமை மற்றும் அந்தப் பெண்ணுடன் அரட்டை அடித்தமை தொடர்பிலான தொலைபேசி ஆதாரங்களை தொலைபேசியில் திரைப்பிரதி செய்து (screen shot) இணையத்தில் கடந்த புதன்கிழமை வெளிவந்தது.

2017 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடம் தஞ்சம் கோரிய பெட்ர் பாவ்லென்ஸ்கி, அந்த வீடியோவை இணையவலையில் வெளியிட்டதாகக் கூறினார்.

பாலியல் காணொலி மற்றும் புகைப்படங்கள் சர்சையில் சிக்கிய பென்சமின் கிரிவாக் பாரிஸ் மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் நிலையிலிருந்து பதவி விலகியுள்ளார்.

No comments