இரு சிசுக்களின் சடலங்கள் மீட்பு

நுவரெலியா – நேஸ்பி தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்து நேற்று (18) இறந்த நிலையில் இரு சிசுக்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த தோட்ட தேயிலை மலையில் வீசப்பட்ட குறித்த சிசுக்கள் தொடர்பில் பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்று, சிசுக்களின் சடலங்களை பாெலிஸார் மீட்டெடுத்தனர்.

இதேவேளை, குறித்த சிசுக்களின் தாயார் தேடப்பட்டு வருவதாகவும், குறித்த சிசுக்களை கொலை செய்தே வீசப்பட்டிருக்கலாம் என்று நுவரெலியா பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சிசுக்களின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மீட்டெடுத்த சிசுக்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments