இறுகின்றது ரணில் தரப்பு ஊழல்?


பிணை முறி மோசடியாளர்களைத் சட்டப்படி தண்டிப்பதற்கான தேவையான அனைத்து சாட்சியங்களையும், மத்திய வங்கியின் பிணைமுறி தடயவியல் கணக்காய்வு அறிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னர், குறித்த மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
பிணைமுறி மோசடியாளர்களை எதிராக சுயாதீன நீதிமன்றம் ஒன்றை அமைத்து, வழக்கு விசாரணைகளை நேரடியாக ஊடகங்களூடாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கேட்டுக்கொண்டார்.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான விவாதத்தை நேற்று(19) ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments