அஜித்துக்கு விடுதலை

தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றை அவமதித்து, சாட்சிகளை அச்சுறுத்தும் விதமாக ஊடக சந்திப்பை நடத்திய குறித்த வழக்கின் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன இன்று (19) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களான கடற்படையை சேர்ந்த துஷார மென்டிஸ், கஸ்தூரிகே காமினி ஆகியோர் குறித்த வழக்கின் எதிரிகள் சார்பு சட்டத்தரணியும் முன்னாள் இராணுவ மேஜருமான அஜித் பிரசன்னவுடன் இணைந்து கடந்த மாதம் 9ம் திகதி நடத்தி ஊடக சந்திப்பில்,

நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பிலான சட்டத்தரணிகள் ஆகியோருக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அஜித் பிரசன்ன, துஷார மென்டிஸ் மற்றும் கஸ்தூரிகே காமினி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் அஜித் இன்று பிணையில் விடுதலை ஆகியுள்ளார்.

No comments