இராணுவ வாகனத்தில் மோதி இருவர் காயம்?

வவுனியா - செட்டிக்குளம், சின்னசிப்பிக்குளம் பகுதியில் நேற்று (18) இரவு 10 மணியளவில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சின்னசிப்பிக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் ஹயசிங்கபுர இராணுவ முகாம் நோக்கி‌ச் சென்று கொண்டிருந்த ஹன்ரர் வாகனத்தின் பின்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் குறித்த வாகனத்துடன் மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்னசிப்பிகுளத்தைச் சேர்ந்த நௌபர் மிர்ஷட் (24வயது), அப்துல் ஜக்பர் ஜூவான் (22 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

நௌபர் மிர்ஷட்‌ என்ற இளைஞன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments