சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

கிளிநொச்சி – வலைபாடு கடற் பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 17 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 4 மீனவப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments