எப்படியேனும் எம்பியாகவேண்டும்?


நாட்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலின் மூலம் எப்படியேனும் நாடாளுமன்றம் சென்றுவிடவேண்டுமென முன்னாள் வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன் தரப்பு மும்முரமாகியுள்ளது.

முன்னதாக கூட்டமைப்பின் ஊடாக கதவை திறக்க செய்திகளை முகவர்கள் மூலம் அவிழ்த்துவிட்ட போதும் அது மெய்த்திருக்கவில்லை.

இந்நிலையில் கையறு நிலையில் உள்ள முன்னாள் மைத்திரி ஆதரவு ஆளுநர்கள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதான கட்சிகளுடன் கூட்டு சேராத மிதவாத கொள்கைகளையுடைய சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரை குறித்த கூட்டணிக்குள் உள்வாங்குவது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி உருவாகும் புதிய கூட்டணியில் இணைத்து, பொதுத்தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன், ஜனாதிபதி சட்டத்தரணி, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மைத்ரி குணரத்ன, சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் தம்ம திசாநாயக்க மற்றும் வட.மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரே இவ்விடயம் தொடர்பாக இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் கசியவிடப்பட்டுள்ளது.

No comments