யாழ் ஆயரை சந்தித்த அங்கஜன்

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகை ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (01) இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள ஆயர் இல்லத்தில் பிற்பகல் இடம்பெற்றது.

"குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் செய்யக்கூடிய அபிவிருத்தி தொடர்பாக பேசப்பட்டது. அரசியல் தொடர்பாக பேசவில்லை. முக்கியமாக மக்களுக்கு தேவையான கல்வி, மீன்பிடி மற்றும் விவசாயம் உள்ளிட்டவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவே பேசப்பட்டது" என்று ஆயர் ஜஸ்டீன் ஞானப்பிரகாஷம் தெரிவித்தார்.

அத்துடன் "பல்துறை நிபுணர்களை கொண்ட அபிவிருத்தி குழு ஒன்று ஆயர் இல்லத்தினால் உருவாக்கப்பட்டிருப்பதற்கு நான் பாராட்டுக்களை தெரிவித்தேன். எனது முழு ஒத்துழைப்பையும் இந்த குழுவிற்கு வழங்குவதாகவும் ஆயரிடம் குறிப்பிட்டேன்.

தமிழ் மக்களுக்கு கல்வி, விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை ஆகியன முக்கியமான விடயம். பொருளாதார அபிவிருத்தியூடாக தமிழ் மக்கள் அனைத்தையும் பொற முடியும் எனும் அடிப்படையில் யாழ் மாவட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எனும் வகையில் ஆயருக்கும் அவருடைய குழுவுக்கும் என்னுடைய ஆதரவை முழுமையாக வழங்கப்போகிறேன்" என்று அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்

No comments