ஐநா தீர்மானத்தால் எந்த பாதிப்பும் இல்லை!

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் அனுசரணையுடனான 30/1 யோசனையால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லையென ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

நாட்டுக்கு பாதிப்பை கொண்டு வந்துள்ளதாக கூறி ஐநா யோசனையில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் இரண்டு யோசனைகளில் இருந்து மட்டும் விலகப்போவதாகவும் கூறுகின்றது.

எனவே அரசாங்கம் முழுமையாக இந்த யோசனையில் இருந்து விலகப்போகிறதா? அல்லது இரண்டு யோசனைகளில் இருந்து மாத்திரம் விலகப்போகிறதா? என்பது கேள்விக்குரிய விடயங்களாகும். பொதுத் தேர்தல் நெருங்கிவரும்  நிலையில், அரசாங்கம் மக்களை  பிழையாக வழி நடத்துகிறது - என்றார்.

No comments