46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பறவையின் உடல் கண்டுபிடிப்பு

சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில் பெலாயா கோரா என்ற கிராமத்தில்  46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பறவையின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கிராமத்தில்  உள்ளூர் வேட்டைக்காரர்  பறவையின் உடலை கண்டுபிடித்தனர். 

உறைபனியில் புதைந்து கிடந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட பறவை உடலை    சுவீடன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிக்கோலஸ் டஸ்ஸக்ஸ் மற்றும் லவ் டாலன் உள்ளிட்டவர்களிடம் ஒப்படைத்தனர் வேட்டைக்காரர்.

ரஷ்யாவிலும் மொங்கோலியாவிலும் வாழும் இரண்டாவது தலைமுறை வானம்பாடி பறவை (Horned Lark) இப்பறவையின் வழித்தோன்றலாக இருக்கலாம் என நிக்கோலஸ் டஸ்ஸக்ஸ் கூறியுள்ளார்.


No comments