தாறுமாறாக ஓடிய கார் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி அரசடி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (10) காலை 8 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

காரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதாலேயே  விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments