இதயராகம் பாடத் தயாரானார் சஜித்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகவுள்ள அரசியல் கூட்டணிக்கு "இணைந்த மக்கள் இயக்கம்" (சமகி ஜன பலவெகய) என்று பெயரிடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டணியின் சின்னம் “இதயம்” என்றும் மொழிபெயப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் இறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

மங்கள சமரவீரவின் நாம் தேசிய முன்னணியுடன் (அபே ஜாதிக பெரமுன) இணைந்தே இந்தக் கூட்டணியை உருவாக்கியதா தெரிகிறது.

அரசியல் கூட்டணியின் செயலாளர் யாரென்பது இன்று தீர்மானிக்கப்பட்டதை அடுத்து இது தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

No comments