டக்ளஸ் போல சித்தரும் கொலையாளியென்கிறார் சுகாஸ்?


தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளியாகாத நிலையில் பரஸ்பரம் எதிர்தரப்புக்களை போட்டுத்தள்ள மற்றைய தரப்புக்கள் தயாராகிவருகின்றன.

அவ்வகையில் கடத்தல், சித்திரவதை, கொலை மற்றும் காணாமல் ஆக்குதல் போன்ற விடயங்களில் சித்தார்த்தன் ஒன்றும் டக்ளஸ்க்கு குறைவானவர் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

சுதுமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏதிர்வரும் தேர்தலில் தனக்கான வாக்கு வங்கியை வட்டுக்கோட்டை தொகுதியை முன்னிறுத்தி சித்தார்த்தன் காய் நகர்த்த தொடங்கியுள்ள நிலையில் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments