கோத்தாவிடமே எனது கார்:மைத்திரி?


முன்னைய ஆட்சி காலத்தில் பில்லியன்களில் நிதி செலவு செய்யப்பட்டு அமைச்சர்கள் சாகனங்களை கொள்வனவு செய்ததாக பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தனக்கு கொள்வனவு செய்த வாகனத்தை தற்போது கோத்தாவே பயன்படுத்துவதாக மைத்திரி அம்பலப்படுத்தியுள்ளார்.
2015 – 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சினால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட குண்டுதுளைக்காத வாகனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பயன்படுத்துவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments