காணி விடுவிப்பே தேவை:விளக்கமல்ல-குகதாஸ்?


மக்கள் மீளக்குடியமரவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஏனைய காணிகளை படையினர் விடுவிக்காமல் வைத்திருக்க முடியாது. மக்களின் அனைத்துக் காணிகளையும் படையினர் விடுவித்து அவர்கள் மீளக் குடியமர்வதற்குரிய அனைத்து வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த காணிகளை இராணுவம் விடுத்தும் அங்கு குடியமர்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையென யாழ் மாவட்ட படைத் தளபதி தெரிவித்துள்ளார். 
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் இராணுவத்தினர் வசம் இருந்தன. இதில் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினரே வைத்திருக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் தான்; படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தாலும் மக்கள் மீளக் குடியமராமல் இருக்கின்றதாக படைத் தளபதி கூறியிருக்கின்றார். 
ஆனால் நாட்டில் நடைபெற்ற யுத்தம் காணரமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்போதும் முகாம்களிலேயே வாழ்கின்றனர். அவர்கள் தமது காணிகளை விடுவிக்குமாறே கோரி வருகின்றனர். அவ்வாறு தமது காணிகளை விடுவித்து தம்மை தமது சொந்த நிலங்களில் மீள்க் குடியமர்த்துமாறு தான் கோரி வருகின்றனர். 
உண்மையில் நீண்டகாலமாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் இருந்த வீடுகள் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளன. அத்தோடு அந்தக் காணிகளும் பற்றைகள் நிறைந்த காடுகளாக இருக்கின்றன. மேலும் அங்கு மக்கள் மிள்குடியமர்வதற்கான வசதி வாய்ப்புக்களையும் முழுமையாக அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லையெனவும் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments