யாழில் இரு மாணவிகள் தற்கொலை!

யாழ்ப்பாணம் – நல்லூர், சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (05) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த ஜெயபால சுந்தரம் சிவசாயினி (20-வயது) என்ற யுவதியே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலைஞ யில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் உள்ள அனைவரும் திருமண வைபவத்திற்காக வெளியில் சென்றிருந்த வேளை குறித்த பெண் தூக்கில் தொங்கியதாக அறிய முடிகிறது.

மேலும் குறித்த மாணவி கொக்குவில் இந்துக் கல்லூரியில் கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் தோற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – புகையிரத நிலைய வீதியில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17-வயது) எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று (05) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments