கதிரைக்காக காலில் விழுந்த மைத்திரி?


ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பினை பதிவு செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செயற்படவுள்ளனர். பொதுச்செயலாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவை இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இதேவேளை, ஸ்ரீலங்கா நிதஹாஷ் பொதுஜன சந்தானய என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியின் கீழ், தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


No comments