யாழில் கொள்ளையர்கள் ஐவர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவு - அரியாலை பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவதுடன் தொடர்பு உடையவர்கள் என்ற சந்தேகத்தில் நேற்று (16) 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு மறைந்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் தங்கம் நகைகளாகவும் உருக்கப்பட்ட நிலையிலும் மற்றும் மண்ணில் புதைக்கப்பட்ட 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 5 பேரும் 20 தொடக்கம் 25 வயது உடையவர்கள் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments