நாளை புதைகுழி அகழ்வு?


மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நாளை அகழ்வுப்பணிகளை மேற்கொள்ள நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வைத்தியசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் நாளைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து அந்த பகுதி மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் துப்புரவு செய்யப்பட்டது.

இந்நிலையில் காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் இலங்கை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

முனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தை பார்வையிட்ட நீதிபதி இடத்தின் ஆரம்பகால வரலாறு தொடர்பாக ஆராயுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அவ்விடத்தில் மனித எச்சங்கள் மற்றும் சீருடைகளின் பாகங்கள் சிலவும் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இறுதி யுத்த காலப்பகுதியான 2009ம் ஆண்டிற்கு முந்திய மனித எச்சங்களாக அவை இருக்கலாம் என கருதப்படுகின்றது.

No comments