பனை அபிவிருத்தி அதிகார சபைக்கு சிங்களவர்?


யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகார சபைக்கு வியாங்கொடையை சேர்ந்த ஓர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிசாந் - பத்திராஜ என்னும் பெரும்பான்மை இனத்தவரே கடந்த மாதம் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பனை அபிவிருத்திச் சபைக்கு ஆட்சி மாற்றங்களின்போது பலர் மாற்றப்பட்டாலும் தொடர்ச்சியாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சபைக்கான தலைவர் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் சபை அங்கத்தவர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதேநேரம் வடக்கில் உள்ள சபைகள் நிறுவனங்கள் வரிசையில் காங்கேசன்துறை சீமேந்து கூட்டுத்தாபனத்திற்கும் சிங்களவர் ஒருவரே நியமிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments