கல்லால் அடித்துக் கொலை! 9 தொழிலாளர்கள் பலி!

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வரும் நிலக்கரி சுரங்கங்கம் ஒன்றில் 9 சுரங்கத் தொழிலாளர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜோகன்னஸ்பெர்க்கில் லெசோதோ என்ற இடத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சோதனை நாடத்தச் சென்ற போதே சுரங்கப் பாதையில் 9 பேர் சடலமாக கிடந்ததமை கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் 10 படுகாயமடைந்ந நிலையில் மீட்கப்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் அனைவரும்சட்ட விரோத நிலக்கரி சுரங்கத்தின் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் அனைவரும் கல்லால் அடித்தே கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்த கொலைகளைச் செய்தவர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதுவரை 87 பேரிடம் விசாரனை நடத்தப்பட்டுள்ளது. 

தென்னாபிரிக்காவில் இது போன்று பல சட்டவிரோத நிலச் சுரங்கங்கள் இயங்கி வருவதால் பல குழுக்களிடையே போட்டி நிலவுகின்றன. இதனால் வன்முறைகள் இவர்களிடையே ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments