நாளை வியாழக்கிழமை வெளிவருகிறது புதிய 20 பவுண்ட்ஸ் பணத்தாள்!

நாளை வியாழக்கிழமை இங்கிலாந்து வைப்பகம் புதிய 20 பவுண்ட்ஸ் பணத்தளை வெளியிடுகிறது.


புதிய 20 பவுண்ட்ஸ் பணத்தாளில் பிரித்தானியக் கலைஞர் ஜே.எம்.டபிள்யூ டர்னரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.

இது 2017 ஆண்டு வெளியிடப்பட்ட  10 பவுண்ட்ஸ் பணத்தாள் மற்றும் 2016 ஆண்டு வெளிவந் 5 பவுண்ட்ஸ் பணத்தாள் போன்று பிளாஸ்டிக் 20 பவுண்ட்ஸ் தாள் வெளிவருகிறது.

அடுத்த வருடம் புதிய பிளாஸ்டிக் தாளில் அமைந்த 50 பவுண்ட்ஸ் நாணயத்தாள் வெளிவரவிருக்கிறது.


காகித பணத்தாளை விட பிளாஸ்டிக் பணத்தாள் நீடித்த மற்றும் வலிமையானது என்று கூறப்பட்டுள்ளது.

காகித குறிப்புகளின் இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பிளாஸ்டிக் குறிப்புகள் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்று இங்கிலாந்து வைப்பகம் மதிப்பிட்டுள்ளது.

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் வெவ்வேறு நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அங்குள்ள வைப்பகங்களால் அச்சிடப்பட்டுள்ளன.

No comments