பிரச்சினைகளை ஓரங்கட்ட வேண்டுகிறார் சுரேஸ்

நாடாளுமன்ற தேர்தலில் மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தமிழ் கட்சிகளுக்குள் இருக்கும் பிணக்குகளை ஓரங்கட்ட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது மலையகம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த புதிய அரசாங்கம் ஆட்சியை அமைத்துக்கொண்டது.
அதேநேரத்தில் தேர்தல் காலத்தில் மலையக மக்களுக்கு மட்டுமின்றி நாட்டில் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துகின்றார்களா என்பதை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அத்துடன், மலையகத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதி வழங்கப்பட்டது.
எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்பாக இந்த ஆயிரம் ரூபாயை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டாயமாக இந்த ஆயிரம் ரூபாய் தைப்பொங்கலுக்கு முன்பு கிடைத்தால் நல்லது என எதிர்பார்க்கின்றோம். - என்றார்.

No comments