ஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க

 ஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன்  மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக  இராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது  நடத்திய ஏவுகணைத் தாக்குதல்லில் 80க்கு மேற்ப்பட்ட அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்திருந்த போதும், எந்த சேதமும் உயிரிழப்புக்களும் காயமும் ஏற்ப்படவில்லை  என்று  ஆரம்பத்தில் கூறிய அமெரிக்க  தற்போது   34 அமெரிக்க படையினருக்கு  மூளை பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாகஒப்புக்கொண்டுள்ளது.

 ஈராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் விமானப்படை  மீதான தாக்குதலுக்குப் பின்னர் 11 அமெரிக்க துருப்புக்கள் மூளையதிர்ச்சி அறிகுறிகளுக்காக சிகிச்சை பெற்றதாகக் கூறியதுடன், இந்த வாரம் கூடுதல் துருப்புக்கள் ஈராக்கிலிருந்து வெளியேறக்கூடும் என்று அமெரிக்க இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதில் பலர் ஜெர்மனியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்துள்ளனர்.

No comments