தொடங்கியது ரணிலின் காய் நகர்த்தல்?


ஐக்கிய தேசியக் கட்சியினில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ரணில் மும்முரமாகியுள்ளார்.ஜதேகவின் செயற்குழு இன்று கூடி கட்சியின் புதிய தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆராயவுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே கட்சியின் செயற்குழுவில் அங்கம் வகித்த சஜித் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அரசியல் பிரமுகர்களை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதிரடியாக நீக்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

இதன்படி சரத் பொன்சேகா ,அஜித் பி பெரேரா ,ரோஸி சேனாநாயக்க ,ரஞ்சன் ராமநாயக்க உட்பட்டவர்களை நீக்கி புதியவர்களை செயற்குழுவில் ரணில் நியமித்துள்ளார்.

இதன் மூலம் தனக்கு எதிராக குரல் எழுவதை தடுக்க அவர் முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments