மாணவர்களிற்கு முகமூடி அவசியமில்லை!


இலங்கையில் மாணவர்கள் எவரும் முகக்கவசம் அணிய தேவையில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து பரவும் பொய்யானத் தகவல்களால் மாணவர்களும் பெற்றோரும் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மாணவர்கள்  முகக் கவசத்தை அணியுமாறு அரசாங்கம் வலியுறுத்தவில்லை என்றார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய, சுற்றுநிருபம் ஒன்று பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சோ, சுகாதார அமைச்சோ முகக் கவசத்தை  அதிக விலை கொடுத்து வாங்கி அணியுமாறு மாணவர்களுக்கோ மக்களுக்கோ ஆலோசனை வழங்கவில்லை என்றார்.

No comments