யாழில் அதிரவைக்கும் அளவில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதனைப் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (29) இரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 142 கிலோ 945 கிராம் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments