விசயகலா வரவே மாட்டார்:சுமந்திரன்!ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஐயகலா மகோஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வது தொடர்பாக எந்தவித பேச்சுக்களிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு இணைவது தொடர்பாக வெளிவந்த செய்திகளையும் மறுத்துள்ளார்.


விஐயகலா மகேஸ்வரன்  ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் தற்போதும் இருக்கின்றார். ஆகவே அவர் எங்களது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளப் போவது தொடர்பிலோ அல்லது எதிர்வரும் தேர்தலில் எங்களுடன் இணைந்து போட்டியிடப் போவதாகவோ இல்லை.


அவ்வாறு இணைந்து கொள்வது தொடர்பில் எங்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் அவர் முன்னெடுக்கவில்லை. ஆகையினால் எங்களது கட்சியில் இணைந்து நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாகச் சொல்லப்படுகின்ற செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை.


மேலும் அவ்வாறு எங்களுடைய கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பான எந்தவித தீர்மானங்களும் தன்னிடம் இல்லை என்று அவரும் ஒரு அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கின்றார். ஆகையினால் தான் எனக்குத் தெரியத்தக்கதாக எங்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் அவர் நடத்தவில்லை  என்றார்.

No comments