தெற்கின் சங்கரியாகின்றார் ரணில்?


தென்னிலங்கை அரசியல் சூழலால் தெற்கின் ஆனந்தசங்கரியாக ரணில் உருவாகலாமென ஆரூடங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜக்கிய தேசியக்கட்சி தலைமையினை ரணில் கட்டிப்பிடித்து தொங்கிக்கொண்டிருக்க எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், பரந்துபட்ட கூட்டணியொன்று அமைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து கட்சிகளும் இடம்பெறும் என்பதுடன், புதிய கட்சிகளும் உள்வாங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற  ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தின் பின்னரே முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பங்காளிக்கட்சிகளது ஆதரவுடன் சஜித் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ள நிலையில் ரணில் தனித்து போய் வடக்கில் தானே தனக்குள் பேசிக்கொள்ளும் வீ.ஆனந்தசங்கரி போல ரணில் உருவாகலாமென ஆரூடங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.No comments