ரயில் பயணிகளுக்கு சலுகை விலையில் காய்கறி

ரயில் பயணிகளுக்கு சலுகை விலையில் காய்கறிகள் வழங்குவதற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க ரயில்வே அமைச்சு முடிவு செய்துள்ளது.
காய்கறிகளின் விலை நாட்டில் உயர்ந்து வருவதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை), கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் மதியம் 02 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

No comments