பொங்கலுக்கு சம்பள நற்செய்தி- தொண்டா

மலையக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்து உள்ளதாகவும், தைப்பொங்கல் தினத்தன்று மலையக மக்களின் சம்பள உயர்வு தொடர்பான நற்செய்தி ஒன்று அறிவிக்கப்படும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நேற்று (09) இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 150 ஆவது நினைவுத்தினம் மற்றும் இந்திய வம்சாவழி மக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

மேலும்,

மலையக தோட்டபுறங்களில் காணப்படுகின்ற மதுபானசாலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கபட உள்ளதோடு மலையகத்தில் உள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாகுறை காணப்படுகிறது.

எனவே, இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகான உள்ளதோடு ஒய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளும் நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரோடு கலந்துரையாடி உள்ளேன்.

இதேவேளை, மலையகத்திற்கான பல்கலைகழகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பிலும் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கபடும் - என்றார்.

No comments