வட, கிழக்கு அபிவிருத்திக்கான தமிழ் மன்றம் ஆரம்பிப்பு

வடக்கு கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் “தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான மன்றம்” அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் ஆகியோரின் தலமையிலேயே குறித்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் ஆயர் இல்லத்தில் இன்று (26) நடந்த கலந்துரையாடலில் வைத்தே குறித்த மன்றம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள துறைசார் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அறிவு, ஆய்வு மற்றும் செயற்திட்டங்களின் வினைத்திறன்மிக்க முகாமைத்துவத்தின் ஊடாகவும் மற்றும் வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் மற்றும் வளங்களை பயன்படுத்தி  தமிழர்களின் செழிப்பு மற்றும் வலுவூட்டலுக்காக மன்றம் ஒன்றை ஸ்தாபித்து செயற்படுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments