மாற்று அணி ஒற்றுமையை அழிக்கும்

மாற்று அணி, கூட்டமைப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது மாறாக தமிழ் மக்களின் ஒற்றுமையை மிகவும் மோசமாக பிளவுபடுத்துமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் தற்போது எந்ததொரு பிரச்சினையும் கிடையாது.

அதாவது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனும் சிறந்த நல்லுறவையே கூட்டமைப்பு தற்போது பேணி வருகின்றது. அந்தவகையில் அவர்களும் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் கூட்டமைப்பு பொதுத்தேர்தலை எதிர்கொள்ளத் தற்போது தயார் நிலையிலேயே உள்ளது. இதனால்தான் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம்.

இதேவேளை மாற்று அணி எங்களுக்கு தேவையில்லை. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் தலைமையில் மாற்று அணி உருவாகினால் அது பாதமாகவே அமையும்.

மேலும் மாற்று அணி உருவாகுமாக இருந்தால் அது தமிழ் மக்களின் ஒற்றுமையே மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாக்கும்” என தெரிவித்துள்ளார்.

No comments