விபத்தில் மாணவன் மரணம்?


வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரி உயர்தர மாணவன் ஒருவன் இ.போ.ச. பஸ்ஸில் அகப்பட்டு நசியுண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து இன்று மாலை விளக்குவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் விளக்குவைத்தகுளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ்.பானுஜன் என்ற ஓமந்தை மத்தியகல்லூரியின் கலைப்பிரிவு இரண்டாம் வருட மாணவனே உயிரிழந்தார்.
பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றிவிட்டு வீடு சென்ற குறித்த மாணவன், மீண்டும் ஓமந்தைப் பகுதிக்கு சென்ற சமயம் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
மாணவனின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

No comments